'பிரதமர் மோடியை புகழ்ந்து பேசவில்லை; தவறாக புரிந்து கொண்டு சர்ச்சையாக்கப்படுகின்றன'; காங்கிரஸ் எம்.பி. சசிதரூர்..! - Seithipunal
Seithipunal


எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவர் கேரளாவின் திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசிதரூர். இவர் அண்மைக்காலமாக பிரதமர் மோடியை பாராட்டி வருவதால்   காங்கிரசுக்குள்ளே சலசலப்பை ஏற்படுத்தி வருவதோடு, மற்ற முக்கிய தலைவர்கள் மத்தியில் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந் நிலையில் பிரதமர் மோடியை புகழ்ந்து எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை என்று சசிதரூர் விளக்கமளித்து கூறியுள்ளதாவது: அதாவது, தனது கருத்துகளின் உண்மையான உள்ளடக்கத்தை, தவறாக புரிந்து கொண்டு சர்ச்சையாக்கப்படுவதக்கவும், தனது வார்த்தைகள் தவறாக புரிந்து கொள்ளப்படுகின்றன என்று தெரிவித்துள்ளார்.

எல்.கே. அத்வானிக்கு நான் காட்டியது 98 வயது கொண்ட முதியவரின் பிறந்த நாளில் நான் காட்டிய மரியாதை தான். அதையே தான் ராகுலும் செய்துள்ளார். பெரியவர்களை மதித்து, அவர்களிடம் நமது மரியாதையை காட்டுவது நம் கலாசாரத்தின் ஒரு பகுதி என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அண்மையில் பிரதமர் மோடி இருந்த மேடையில் நான் இருந்தேன். அவரின் உரையைக் கேட்டேன். பார்த்தேன், அதை பற்றி ஓரிரு வார்த்தைகள் எழுதினேன். அதை தவிர நான் எங்கே அவரை பாராட்டினேன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், சமூக ஊடகங்களில் நான் பகிர்ந்த பதிவை படித்தாலே இதை யார் வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம் என்றும், நான் மோடியை புகழ்ந்து பேசவில்லை என்று கூறியுள்ளார்.

அத்துடன், தனது பதிவை படிக்காமல் செய்திகளின் தலைப்புகளின் அடிப்படையில் விஷயங்களை மதிப்பிடுகிறீர்கள் இது சரியான அணுகுமுறை கிடையாது என்று தெரிவித்துள்ளார். மேலும், குறைந்தபட்சமாவது நான் சொல்வதை அதன் சூழலில் இருந்து பார்க்க முயற்சிக்க வேண்டும் என்றும், அப்படி செய்தால் இதுபோன்ற சர்ச்சைகளை தவிர்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரசில் 17 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். எனவே தவறான புரிதல்கள் தேவையில்லை என்றும், காங்கிரஸ் ஒரு ஜனநாயக கட்சி என்றும், கேரள தலைவர்களுடன் எனக்கு நல்லுறவு இருக்கிறது என்றும்  வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் வெற்றிக்காக நாங்கள் இணைந்து செயல்படுவோம் என்று சசிதரூர் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Congress MP Shashi Tharoor says he did not praise Prime Minister Modi


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->