பஞ்சாப் : காங்கிரஸ் மூத்த தலைவரை சுட்டுக்கொன்ற பெண்.!! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரை பெண் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்றுள்ளார்

பஞ்சாப் மாநிலம் தார்ன்தரன் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மேஜர் சிங் தலிவாலுக்கு சொந்தமான திருமண மஹால் உள்ளது. இந்த திருமண மஹாலில் அமிர்தசரஸின் மொஹ்காம்புரா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் சில ஆண்டுகளாக மலர் அலங்காரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அந்தப் பெண் தனது முதலாளியும், காங்கிரஸ் தலைவருமான மேஜர் சிங் தலிவாலை திடீரென துப்பாக்கியால் சுட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இந்த துப்பாக்கி சூட்டில் பலத்த காயமடைந்த மேஜர் சிங் தலிவாலை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மேஜர் சிங் தலிவால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தலைமறைவான பெண் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் குற்றம் சாட்டப்பட்டவர், அமன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாக மூத்த போலீஸ் சூப்ரண்ட் குர்மீத் சவுகான் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress leader Major Singh Dhaliwal shot dead by a woman in Punjab


கருத்துக் கணிப்பு

இந்திய அணியின் பயிற்சியாளாராக கவுதம் கம்பீர் தேர்வு சரியானதா?Advertisement

கருத்துக் கணிப்பு

இந்திய அணியின் பயிற்சியாளாராக கவுதம் கம்பீர் தேர்வு சரியானதா?
Seithipunal
--> -->