வருகிற சட்டசபைத் தேர்தலில் காங்கிரசை குப்பைத் தொட்டியில் தான் போட வேண்டும் - முதலமைச்சர் பரபரப்பு பேச்சு.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள சிக்கநாயக்கனஹள்ளியில் அரசு வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாநிலத்தின் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பங்கேற்றார். அப்போது வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்து பின்னர் அவர் பேசியதாவது:- 

"கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவுக்கு அடுத்த முக்கிய நகரமாக திகழ்வது துமகூரு. இந்த நகருக்கு எத்தினஒலே குடிநீர் திட்டத்தின் முதல்கட்ட நீர் வருகிற ஜூன் மாதம் கிடைக்கும். துமகூருவிற்கு கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை செய்துள்ளோம். 

மாநிலத்தில் நடுத்தர மக்கள் மாதம் 70 முதல் 80 யூனிட் மின்சாரத்தை தான் பயன்படுத்துகிறார்கள். ஆனால் மாதம் 200 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்குவதாக காங்கிரஸ் கூறுகிறது. மக்களுக்கு வாக்குறுதி உத்தரவாத அட்டையை மட்டும் வழங்குகிறது ஆனால், அதற்கு எந்த மதிப்பும் கிடையாது. 

பொதுமக்களிடம் காங்கிரஸ் கட்சியை அறிமுகம் செய்து கொள்வதற்காக இந்த உத்தரவாத அட்டையை வழங்குகிறார்கள். ஆனால், அந்த அட்டையை பெண்கள் வாங்கி குப்பை தொட்டியில் போட்டுள்ளனர். 

அந்த அட்டையை வைத்து ஊறுகாய் கூட போட முடியாது. வருகிற சட்டசபை தேர்தலில் காங்கிரசை குப்பை தொட்டியில் தான் வீச வேண்டும். கர்நாடகாவில் மீண்டும் ஒரு முறை பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்த வேண்டும்" என்று அவர் பேசியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congrass should be thown dustbin in assembly election karnataga CM basavaraj bommai speech


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->