அமைதி காப்போம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்.! - Seithipunal
Seithipunal


பாபர் மசூதி - ராமஜென்ம பூமி தொடர்பான சர்ச்சைக்குரிய வழக்கில் அலகாபாத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மீதான மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்ளிட்ட 5 மூத்த நீதிபதிகள் கொண்ட அமர்வு நீதிமன்றம் விசாரித்து, இன்று (09.11.2019) தீர்ப்பு வழங்கியுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும். எந்தவொரு தரப்பும் வெற்றியாகவோ, தோல்வியாகவோ கருதாமல் நீதி பரிபாலன முறையின் உச்ச அமைப்பு வழங்கிய தீர்ப்பில் மதச்சார்பின்மை என்பது அரசில் அமைப்பு சட்டத்தின் அடிப்படை பண்பு என்று கூறியிருப்பதை கருத்தில் கொண்டு சமூக நல்லிணக்க சூழலை பராமரித்து வருவது குடிமக்களின் கடமைப் பொறுப்பு என்பதை உணர்ந்து, அனைத்துத் தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வேண்டிக் கேட்டுக் கொள்கிறது .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

communist satement about ayoti judgement


கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
Seithipunal