கிருஷ்ணகிரி || கல்லூரி மாணவியின் மரணத்தால் மீண்டும் சிக்கிய தனியார் மருத்துவமனை - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி || கல்லூரி மாணவியின் மரணத்தால் மீண்டும் சிக்கிய தனியார் மருத்துவமனை - காரணம் என்ன?

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, ஓசூர் அருகே அலசநத்தம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது மகள் பூஜாஸ்ரீ, அங்குள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வந்தார். இவருக்கு நேற்று முன்தினம் திடீரென உடல்நலக்குறைபாடு ஏற்பட்டதனால், ஓசூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக பெற்றோர் அனுமதித்தனர். 

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிகிச்சையினால் மாணவியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், மருத்துவர்கள் இன்று மாலை 4.30 மணியளவில் மாணவியின் உடல்நிலை கடுமையாக பாதிப்பிற்கு உள்ளாகியிருப்பதாகவும், நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் வேறு மருத்துவமனைக்கு மாற்றிக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளனர். 

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், வென்டிலேட்டர் வசதி கொண்ட ஆம்புலன்சில் வைத்து வேறு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மாணவி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகவும், முந்தைய மருத்துவமனையில் இதயத்தை துடிக்க வைக்க ஊசி போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

இதனால் கடும் கோபமடைந்த மாணவியின் பெற்றோர் தனியார் மருத்துவமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் மகளுக்கு தவறான சிகிச்சை அளித்ததே அவரின் மரணத்திற்கு காரணம் என்று குற்றம்சாட்டி, உரிய நீதி கிடைக்கும் வரை போராட இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவியின் உயிரிழப்பிற்கு காரணமான இந்தத் தனியார் மருத்துவமனை கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தமிழ்நாட்டை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய கருமுட்டை களவு விவகாரத்தில் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

college student died in krishnagiri for wrong treatment


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->