பேஸ்புக் காதலால் ஏற்பட்ட விபரீதம்.! வீடியோ எடுத்தபடி கல்லூரி மாணவி தற்கொலை.! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் பேஸ்புக் காதலன் மிரட்டியதால் கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள சத்ய சாயி மாவட்டம் எர்ர பள்ளியை சேர்ந்தவர் சந்தியா ராணி (17). இவர் அன்னமய்யா மாவட்டம், முனகலு செருவு பகுதியில் உள்ள விடுதியில் தங்கி தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் சந்தியா ராணிக்கு ரால பள்ளியை சேர்ந்த இம்தியாஸ் என்ற நபருடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்பு இருவரும் பேஸ்புக் மூலம் பேசி நட்பாக பழகி வந்துள்ளனர். இதையடுத்து இவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறி நீண்ட நேரம் செல்போனில் பேசி இருவரும் காதலை வளர்த்து வந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, இவர்கள் இருவரும் தங்களது போட்டோக்களை பரிமாறிக் கொண்டுள்ளனர். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி இம்தியாஸ், மாணவியின் போட்டோக்களை ஆபாசமாக மார்பிங் செய்து அவரது வாட்ஸ்அப்பிற்கு அனுப்பி பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

மேலும் பணம் கொடுக்கவில்லை என்றால் ஆபாச படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக கூறி சந்தியா ராணியை மிரட்டி உள்ளார்.

இதையடுத்து விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த சந்தியா ராணி, போட்டோக்களை இம்தியாஸ் சமூக வலைத்தளங்களில் வெளியீட்டு விடுவாரோ என்று பயந்து தனது செல்போனில் வீடியோ எடுத்தபடி, வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சந்தியா ராணியின் பெற்றோர், அறையில் இருந்த செல்போனை பார்த்தபோது, தற்கொலை செய்வதற்கு முன்பாக இம்தியாஸ் மிரட்டியதால் தற்கொலை செய்து கொள்வதாக வீடியோவில் பேசி இருந்தது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து சந்தியா ராணியின் பெற்றோர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள இம்தியாசை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

College student commits suicide due to Facebook boyfriend threats in andhrapradesh


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->