2,000 அடி பள்ளத்தில் விழுந்த 10-ஆம் வகுப்பு மாணவி...! - 4 நாட்களுக்குப் பின் உடல் மீட்பு! நடந்தது என்ன...? - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீநந்தா (14), தனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் உட்பட 40 பேருடன் கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவுக்குச் சுற்றுலா சென்றிருந்தார்.

கடந்த 7-ஆம் தேதி முல்லையன்கிரி மற்றும் சந்திரதிரிகோண மலைப்பகுதிகளைச் சுற்றிப் பார்த்த அவர்கள், மாணிக்கத்தாரா அருவி அருகே கீழே இறங்கும்போது ஸ்ரீநந்தா திடீரென மாயமானார்.

இது குறித்துத் தகவல் அறிந்த காவலர்களும் வனத்துறையினரும் தீவிரத் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நான்கு நாட்கள் தேடுதலுக்குப் பிறகு, டிரோன் உதவியுடன் சுமார் 2,000 அடி ஆழமான பள்ளத்தில் ஸ்ரீநந்தா சடலமாக மீட்கப்பட்டார்.

மேலும்,  மீட்புக்குழுவினர் கயிறு கட்டி பள்ளத்தில் இறங்கி மாணவியின் உடலை மீட்டனர்.மாணவி செல்பி எடுக்கும்போது தவறி விழுந்தாரா ?அல்லது வேறு ஏதேனும் காரணமா ? என்பது குறித்துப் காவலர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்துச் சிக்கமகளூரு காவல் கண்காணிப்பாளர் ஜிதேந்திர குமார் தெரிவிக்கையில், மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மாவட்டக் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Class 10 student who fell 2000 foot gorge Body recovered after 4 days What happened


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->