ஒமைக்ரான் பரவல்.. புதிய கட்டுப்பாடு விதித்த அம்மாநில அரசு.!! - Seithipunal
Seithipunal


டெல்லியில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. அதேசமயம் ஒமைக்ரான் தொற்றும் அதிகரித்து வருகிறது. டெல்லியில் இதுவரை 57 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக புதிய கட்டுப்பாடுகளை டெல்லி அரசு விதித்துள்ளது.

ஒமைக்ரான் பாதிப்புகள் படிப்படியாக அதிகரித்து வருவதால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பான அனைத்து கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சாரம், மதம் மற்றும் திருவிழா தொடர்பான கூட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. 

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தங்கள் அதிகார வரம்பிற்கு உட்பட்ட பகுதிகளில் தீவிரமாக ஆய்வு செய்து கொரோனா வைரஸ் மற்றும் அதன் மாறுபாடான ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவக்கூடிய இடங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகள் கண்டிப்பாக வழிகாட்டு நெறிமுறைகளையும் கடைபிடித்தால், செயல்பட அனுமதிக்கப்படும். உணவகங்கள் மற்றும் பார்கள் இருக்கைகளில் பாதி அளவு வாடிக்கையாளர்களை அனுமதிக்க வேண்டும். திரையரங்கில் மற்றும் மல்டிபிளக்ஸ் தொடர்ந்து 100% இருக்கைகள் பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

christmas and new year celebration ban for delhi govt


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->