சமூக நீதிக்கான அரசமைப்புச் சார்ந்த கருவிதான் இடஒதுக்கீடு ; சிராக் பாஸ்வான்..!
Chirag Paswan says that the reservation system was introduced to uplift certain sections of society that faced social exclusion
சமூக நீதிக்கான அரசமைப்புச் சார்ந்த கருவியாக இடஒதுக்கீடு தொடர்கிறது என்று மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை டெல்லியின் ஜந்தர் மந்தரில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு இடஒதுக்கீடு முறையில் சீர்திருத்தம் வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இடஒதுக்கீடு சாதி அடிப்படையில் அல்லாது குடும்பத்தின் வருவாய் அடிப்படையில் வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல் துறை அனுமதி வழங்கிய நேரத்தை கடந்து போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்தால் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டம் குறித்து, மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வானிடம் பாட்னா விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:

இடஒதுக்கீடு முறையை ஒருசிலரின் கோரிக்கையை ஏற்று இடஒதுக்கீடு முறையை முடிவுக்கு கொண்டு வர முடியாது என்றும், அது கருணை அடிப்படையிலானதும் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சமூக புறக்கணிப்பை எதிர்கொண்ட சமூகத்தின் சில பிரிவுகளை முன்னேற்றவே இடஒதுக்கீடு முறை அறிமுகமானது என்றும், குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினரை நமது தேசத்தின் அரசமைப்பு அடையாளம் கண்டு, அவர்களின் முன்னேற்றுக்கான ஆதாரமாக இடஒதுக்கீட்டை அறிமுகம் செய்ததாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், நமது சமூகத்தில் சமூக ரீதியான புறக்கணிப்பு சம்பவங்கள் அரங்கேறுகின்றன. அந்த வகையில் சமூக நீதிக்கான அரசமைப்புச் சார்ந்த கருவியாக இடஒதுக்கீடு தொடர்கிறது என்று கூறியுள்ளார்.
English Summary
Chirag Paswan says that the reservation system was introduced to uplift certain sections of society that faced social exclusion