11 பேர் பலி எதிரொலி: பெங்களூரில் புதிய கிரிக்கெட் மைதானம்!
Chinnaswamy Stadium Bangalore new Stadium
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி, 18 ஆண்டுகள் கழித்து ஐபிஎல் கோப்பையை வென்றது. இதையடுத்து சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா நடந்தது. முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பங்கேற்க லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால், ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் கூட்டம் அதிகரித்து போலீசார் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மைதான நுழைவாயிலில் பெரும் நெரிசல் உருவாகி, 11 பேர் உயிரிழந்தனர்.
விபத்து தொடர்பாக கர்நாடக அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததுதான் விபத்துக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனிடையே, சின்னசாமி மைதானத்தை நகரின் மையப்பகுதியிலிருந்து மாற்றும் பரிசீலனை நடைபெறுவதாக முதலமைச்சர் தெரிவித்தார். அதேசமயம், பெங்களூருவின் பொம்மசந்திரா பகுதியில் புதிய கிரிக்கெட் மைதானம் அமைக்கும் திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சூர்யா சிட்டியில் ரூ.1,650 கோடி செலவில் உருவாகும் பிரமாண்ட விளையாட்டு வளாகத்தின் பகுதியாக, 80,000 இருக்கைகளுடன் கிரிக்கெட் மைதானம் அமைய உள்ளது. இது, அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது பெரிய மைதானமாக இருக்கும்.
English Summary
Chinnaswamy Stadium Bangalore new Stadium