மீண்டும் இந்திய எல்லைக்குள் ஊடுருவிய சீனா.. கால்வான் பள்ளத்தாக்கில் மீண்டும் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


கால்வான் பள்ளத்தாக்கில் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் மோதல் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடந்த தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். தற்போது கால்வான் பள்ளத்தாக்கில் சீனாவின் படைகள் இந்திய எல்லைக்குள் 423 மீட்டர் தூரம் வரை ஊடுருவி இருப்பது தெரியவந்துள்ளது. 

சீனா 1960 ஆண்டு தனக்கு சொந்தம் என உரிமை கோரும் வரை அப்பகுதியில் எல்லைக் கோர்ட்டுக்கு முன் உள்ளது. என்டிடிவி வெளியிட்டுள்ள செயற்கைக்கோள்படங்களின் ஜூன் 25ஆம் தேதி நிலவரப்படி, இந்திய நிலப்பரப்பின் 423 மீட்டர் தூரத்தில் சீன ராணுவம் ஊடுருவி உள்ளது.

அந்த பகுதியில், சீனாவின் 16 கூடாரங்கள், தார் சாலைகள், ஒரு பெரிய தங்குமிடம் மற்றும் குறைந்தது 14 வாகனங்கள் இருந்தது என்பது செயற்கைக்கோள் புகைப்படத்தில் தெரிகிறது. செயற்கைக்கோள் படங்கள் ஒரு தெளிவான ஊடுருவலை காட்டுகிறது.

கூகிள் எர்த் ப்ரோவில் உள்ள அளவீட்டு கருவி, அதன் சொந்த உரிமைகோரல் கோட்டுக்கு வடக்கே கால்வான் ஆற்றங்கரையில் 423 மீட்டர் இந்திய நிலப்பரப்பை சீன ராணுவம் ஆக்கிரமித்து உள்ளது தெரிவாக காட்டுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

china intrudes 423 metres in india


கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
Seithipunal