தமிழகத்தை நெருங்கி உள்ள பேராபத்து! இலங்கை உதவியுடன் இந்தியாவில் ஊடுருவ முயற்சி! - Seithipunal
Seithipunal


அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தி வட இலங்கையை கைப்பற்ற நினைக்கும் சீனா!

இலங்கையில் சீன ராணுவத்தின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் இந்தியாவின் பாதுகாப்பில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மற்றும் மீனவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. சீனா இலங்கையில் இராணுவ நடவடிக்கைகள் அதிகரித்து உள்ளதால் தமிழகத்தில் கடலோர எல்லை பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். இலங்கையில் சீனர்களின் செயல்பாடுகள் தேசிய பாதுகாப்புக்கு கவலை அளிக்கும் வகையில் இருப்பதாகவும், கடற்கரையோரத்தில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் சில நாட்களுக்கு முன்பு மாநில உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்ததாக சொல்லப்படுகிறது. 

சீன அதிகாரிகள் இலங்கையில் அரசியல் கட்சி நிர்வாகிகள் உதவியுடன் கடல் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள அதிநவீன சீன கப்பலை மேற்கோள் காட்டி மத்திய உளவுத்துறையை தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தமிழ்நாடு கடற்கரையோரத்தில் அணுமின் நிலையங்கள் அமைந்துள்ளதால் சீன ராணுவத்தின் மூலம் தமிழகத்திற்கு பெரும் அச்சுறுத்தல் உண்டாகியுள்ளது. சீன ராணுவத்தினர் மற்றும் அதிகாரிகள் முல்லைத்தீவு, பருத்தித்தீவு, அனலைதீவு, மீசாலை, சாவக்கச்சேரி உட்பட வட இலங்கையின் பல பகுதிகளில் சுதந்திரமாக நடமாடுவது தமிழக மீனவர்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனர்கள் தங்களுடைய ஒரே வாழ்வாதாரமான கடல் வளத்தை சுரண்டுகிறார்கள் என மீனவர்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.

தற்போது இலங்கையில் நிலவும் அரசியல் குழப்பத்தை வைத்து பிரிவினையை ஏற்படுத்தி இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வாழும் தமிழர்கள் மீதான இந்தியாவின் நம்பிக்கையை குறைத்துவிடுமோ என்ற அச்சம் உள்ளூர் தமிழர்களின் இருந்தது வருகிறது. 

சீன ஆராய்ச்சிக் கப்பலான யுவான்வாங்-5 ஆகஸ்ட் 11 அன்று இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தருவது குறித்த மத்திய அரசின் ஆலோசனைக்கு பின்னர் இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இது குறித்து தமிழ்நாடு கடலோரப் பாதுகாப்புக் குழுவின் தலைவர் சந்தீப் மிட்டல் கூறியதாவது "இலங்கையில் சீனர்கள் நடமாட்டம் அதிகரித்து வருவது உண்மை. இலங்கைக்கான சீன தூதர் சர்வதேச கடல் எல்லைக் கோட்டிற்கு அருகில் உள்ள தீவுகளுக்கு அடிக்கடி வருகை தருவதும், கடல் வளம் குறித்தான ஆய்வுகள் என்ற போர்வையில் அப்பகுதியில் ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு செய்வதும் சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது. மேலும் இலங்கையில் படிக்கும் முதுகலை மாணவர்களுக்கு நிதியுதவி செய்கிறது. சீனர்கள் இலங்கையில் உள்ள இளைஞர்களை தங்கள் எதிர்காலத் திட்டங்களுக்கு ஆதரவாகக் கவர முயற்சிக்கிறார்கள் என்பது வெளிப்படையானது. சீனர்கள் மட்டுமே இந்திய கடல் எல்லைக்குள் ஊடுருவுவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை" என்று மாநில கடல்சார் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளரும் டாக்டர் மிட்டல் கூறினார்.

 தமிழ்நாடில் அனைத்து கடலோர மாவட்டங்களுக்கும் உளவுத்துறை மூலம் கண்காணிப்பை தீவிர படுத்தவும், கடற்கரையோரத்தில் பாதுகாப்பை தீவிரப்படுத்தவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலோர பாதுகாப்பு திட்டத்தின் மூன்றாம் கட்ட செயல்திட்டம் அவசர தேவை என தமிழக பாதுகாப்பு அமைப்பு மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் இரண்டாம் கட்டம் முடிவடைந்த பிறகு, கரையோரப் பாதுகாப்புக் குழுவிற்கான நிதி மற்றும் உள்கட்டமைப்பு ஆதரவு நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

China attempt to invade India with the help of Sri Lanka


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->