அணையில் விழுந்த செல்போன்! 41 லட்சம் லி. நீரை வெளியேற்றிய அராஜகம்! காங்கிரஸ் அரசு கொடுத்த விளக்கம்!
Chhattisgarh govt explain about cellphone in dam issue
சத்தீஸ்கர் : ஆற்று அணையில் தவறவிட்ட செல்போனை தேடி எடுப்பதற்காக, பாசனத்திற்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 41 லட்சம் லிட்டர் நீரை வெளியேற்றிய அரசு அதிகாரியின் அராஜக செயல் அரங்கேறியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் கெர்கட்டா அணையில் தான் இந்த அராஜக சம்பவம் அரங்கேறியுள்ளது.
கடந்த ஞாயிறு அன்று தனது விடுமுறையை கழிக்க கெர்கட்டா அணை பகுதிக்கு வந்த உணவு அதிகாரி ராஜேஷ் விஸ்வாஸ், செலஃபீ எடுக்கும் போது தனது சாம்சங் எஸ்23 போனை அணை நீரில் தவறவிட்டுள்ளார்.

ரூ.96,000 மதிப்புள்ள அந்த போனை எடுத்தாக வேண்டும் என்று முடிவு செய்த ராஜேஷ், தனது போனில் அரசு தரவுகள் இருப்பதாகவும், போனை எப்படியேனும் மீட்க வேண்டும் என்று, நீர் பாசனத்துறை அதிகாரிகளுடன் பேசி உள்ளார்.
இதனை தொடர்ந்து, 30 ஹார்ஸ்பவர் கொண்ட என்ஜின் பம்ப் மூலம் அணையில் இருந்த நீர் வெளியேற்றப்பட்டு உள்ளது.
சுமார் 15 அடி அளவிற்கு இருந்த 41 லட்சம் லிட்டர் அளவிலான நீர் வெளியேற்றப்பட்டு அந்த செல்போன் மீட்கப்பட்டுள்ளது உள்ளது. ஆனால், நீருக்குள் நீண்ட நேரம் இருந்த காரணத்தால் இயங்கவில்லை.
இதற்கிடையே இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ராஜேஷ் விஸ்வாஸ் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட நீர் பாசனத்திற்கு முற்றிலும் பயன்படுத்த உகந்த வகையில் இல்லாதது என அம்மாநில காங்கிரஸ் அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
English Summary
Chhattisgarh govt explain about cellphone in dam issue