ஏழை விவசாயிகளுக்கு 150 கிலோ இலவச அரிசி..!! மாநில அரசு முடிவு..!! - Seithipunal
Seithipunal


குடும்ப அட்டை வைத்துள்ள ஏழை விவசாயிகளுக்கு 150 கிலோ இலவச அரிசி வழங்கும் புதிய திட்டத்தை சத்தீஸ்கர் மாநில அரசு அறிவித்துள்ளது..!!

கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில் செயல்படுத்தப்பட்ட இலவச ரேஷன் அரிசி திட்டத்தை நீட்டிப்பு செய்து வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பயனாளிகளுக்குக் கிடைக்கும் வகையில் பி.பி.எல் கார்டு வைத்திருப்பவர்களுக்கு 150 கிலோ இலவச அரிசி வழங்க சத்தீஸ்கர் மாநில அரசு முடிவு செய்துள்ளது. 

ஏற்கனவே பி.பி.எல் குடும்ப அட்டை வைத்துள்ளவர்களுக்கு இலவசமாக 15 முதல் 135 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது. அதனுடன் கூடுதலாக வழங்க சத்தீஸ்கர் மாநில அரசு முடிவு செய்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ள பி.பி.எல் குடும்ப அட்டை வைத்திருக்கும் நபர்கள் 15 முதல் 150 கிலோ அரிசியைப் பெறுவார்கள்.

மத்திய, மாநில அரசுகள் கடந்த அக்டோபர், நவம்பர் ஆகிய 2 மாதங்களுக்கான அரிசி ஒதுக்கீடு தனிநபர்களுக்கு ஒரே நேரத்தில் வழங்கப்படும் என சத்தீஸ்கர் மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் அறுவடை காலத்தை ஒட்டி இந்த திட்டத்தை சத்தீஸ்கர் மாநில அரசு செயல்படுத்தி உள்ளது. இந்த காலகட்டத்தில் ரேஷன் கார்டுதாரர்கள் 150 கிலோ அரிசி பெற தகுதியுடையவர்கள், முந்தைய அளவை விட 35 கிலோ அதிகமாக பெற உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chhattisgarh govt decide 150kg free rice for farmers


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->