கேபிள் டிவி செயலிழப்பு விவகாரம் : தனியார் நிறுவனத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.!
chennai highcourt order for govt cable tv case
தமிழ்நாடு அரசின் கேபிள் டிவி நிறுவனத்தினுடைய சேவை மென்பொருள் தனியார் நிறுவனத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த நிறுவனத்தில் சட்டவிரோதமாக செயலிழப்பு செய்யப்பட்டதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, தனியார் மென்பொருள் நிறுவனத்தால் சட்டவிரோதமாக அரசு கேபிள் டிவி செயலிழப்பு செய்யபட்ட விவகாரத்தில் அந்த நிறுவனத்தின் நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, அரசு கேபிள் டிவி சேவையை இடையூறின்றி வழங்க வேண்டும் என்று தனியார் மென்பொருள் நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் கேபிள் சேவையை துண்டிக்க கூடாது என்றும், இந்த விவகாரத்தில் மத்தியஸ்தர் மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
English Summary
chennai highcourt order for govt cable tv case