ஒரே நாடு! ஒரே தேர்தல் மசோதா! டெல்லி பாஜகவின் மாஸ்டர் பிளான்! - Seithipunal
Seithipunal


செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு காலகட்டங்களில் தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் செலவினங்கள் அதிகரித்ததோடு அரசு ஊழியர்களின் பணிச்சுமையும் அதிகரித்து காணப்படுகிறது. அதேபோன்று மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு, நாட்டின் வளர்ச்சி உள்ளிட்டவை முரண்பட்டு காணப்படுகிறது.

இந்நிலையில் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கான தேர்தல் நடத்துவது குறித்து ஏற்கனவே மத்திய சட்டத்துறை அமைச்சகத்தின் மூலம் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளிடம் கருத்து கேட்கப்பட்டது.

தமிழகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் அதிமுக மற்றும் பாஜக ஆதரவு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்த சூழ்நிலையில் வரும் செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரை நடத்த மத்திய பாஜக அரசு முடிவு செய்துள்ளது. இந்த சிறப்பு கூட்டத்தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்றும் விதமாக மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் டெல்லி வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CentralGovt planed one nation one election bill in special session


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?
Seithipunal
--> -->