மகளிர் சுய உதவி குழு மூலம் ரேஷன் கடைகள்..!! தமிழகத்தில் 1,480 கடைகளை தேர்வு செய்தது மத்திய அரசு..!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் தற்பொழுது 5,36,038 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் தனியார் பங்களிப்புடன் 2,78,353 ரேஷன் கடைகளுக்கும், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பொது விநியோக வாரியம் மூலமாக 82,517 ரேஷன் கடைகளும் மகளிர் சுய உதவி குழு மூலம் 25,323 ரேஷன் கடைகளும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொது விநியோகத் திட்டத்தை மேலும் சிறப்பாக நடத்த மாநில உணவுத்துறை செயலாளருடன் மத்திய உணவு துறை செயலாளர் ரஞ்சிவ் சோப்ரா சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் இந்தியாவில் உள்ள ரேஷன் கடைகளை மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் கிராம பஞ்சாயத்துக்களுடன் இணைந்து செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. இதற்கு பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசு உறுதியாக இருப்பதால் முதல் கட்டமாக தனியார் டீலர்களிடம் உள்ள ரேஷன் கடைகளை மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளின் உதவியுடன் செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு காரணம் நியாய விலை கடைகளில் விநியோகிக்கப்படும் பொருட்களுக்கு மலை பிரதேசம் மாநிலங்களில் தனியார் டீலர்களுக்கு ஒரு குவின்டாலுக்கு 143 ரூபாயும், மற்ற மாநிலங்களில் 90 ரூபாயும் கமிஷனாக வழங்கப்படுகிறது. மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் செயல்படுத்தி ரேஷன் கடைகளை மேலும் வலுப்படுத்தவும் மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளின் நிதி நிலையை அதிகரிக்கும் நோக்கத்தோடும் இந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது நாடு முழுவதும் 38,788 ரேஷன் கடைகளை மத்திய அரசு தேர்வு செய்து மகளிர் சுய உதவி குழு மற்றும் கிராம பஞ்சாயத்து மூலம் செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 1,480 கடைகள் தேர்வாகியுள்ளன. மேலும் ரேஷன் கடைகளில் வழக்கமான ரேஷன் பொருட்களுடன் மக்கள் அதிகம் பயன்படுத்தும் பிரபல நிறுவனங்களின் வீட்டு உபயோகப் பொருட்களும் விற்பனை செய்யப்பட உள்ளது. கூடிய விரைவில் இத்திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Centralgovt decide handover Ration shops to women self help group


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->