கனடா வாழ் இந்தியர்களே உஷார்! மத்திய அரசின் திடீர் எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


கனடாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு மத்திய அரசு புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளது!

கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இந்திய உளவாளிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என குற்றம் சாட்டி இந்திய தூதரக அதிகாரி ஒருவரை நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என கனடா அரசு உத்தரவிட்டது. 

அதற்கு பதிலடியாக இந்தியாவில் உள்ள கனடா தூதரை அழைத்த மத்திய வெளியுற துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்ததோடு அடுத்த ஐந்து நாட்களுக்குள் கனடா தூதரக அதிகாரி ஒருவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டது.

இந்தியாவில் காலிஸ்தான் என்ற தனி நாட்டை உருவாக்க வேண்டும் என பிரிவினைவாதிகள் கனடாவில் அவ்வப்போது வாக்கெடுப்பு நடத்தி வரும் நிலையில் அதற்கு இந்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதே போன்று இந்தியாவின் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களை கொண்டாடும் கனடா வாழ் இந்தியர்கள் மீது காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அதற்கு கனடா அரசு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வருகிறது. இதற்கு காலிஸ்தான் பிரிவிவாதிகள் கனடா பிரதமருக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதே காரணம் என இந்தியா குற்றம் சாட்டி உள்ளது.

இந்த நிலையில் காஷ்மீருக்கு பயணம் செய்யும் கனடா நாட்டவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என கனடா அரசு நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் கனடாவில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் கல்விக்காக சென்ற மாணவர்கள் மிகவும் கவனமாக இருக்கும்படி இந்திய வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளது.

அதில் இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகள் மற்றும் அரசியல் ரீதியான செயல்பாடுகளை கனடா அரசு ஊக்குவித்து வருகிறது. எனவே பதட்டமான இடங்களுக்கு செல்வதை கனடாவில் வசிக்கும் இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கையின் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CentralGovt advises Indians and students in Canada to be vigilant


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->