இன்று முதல் 100 சதவீதம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


மத்திய அரசு அலுவலகங்கள் இன்று முதல் 100% பணியாளர்களுடன் முழுமையாக இயங்குகிறது.

கொரோனாவின் மூன்றாவது அலை காரணமாக இந்தியா முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும், 50 சதவீத பணியாளர்களுடன் மத்திய அரசின் அலுவலகங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது.தற்போது கட்டுப்பாடுகளின் எதிரொலியாக படிப்படியாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. 

இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா தொற்று குறைந்திருப்பதால் இன்று முதல் மத்திய அரசு அலுவலகங்கள் முழுமையான பணியாளர்களுடன் இயங்கும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, இந்த உத்தரவு அனைத்து மட்டங்களில் உள்ள பணியாளர்களுக்கும் பொருந்தும். 

மேலும், முக கவசம், தனிமனித இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிமுறைகளை மத்திய அரசு ஊழியர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக பிப்ரவரி 15ஆம் தேதி வரை மத்திய அரசு அலுவலர்களை சேர்ந்த 50 சதவீத ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central govt office 100 percent staf


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->