வொர்க் ஃப்ரம் ஹோம் : ஜூலை 31 உடன் முடிய உள்ள நிலையில், மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!  - Seithipunal
Seithipunal


கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தியது முதல், வீட்டில் இருந்து வேலை செய்து வரும் தகவல் தொழில் நுட்பத்துறை மற்றும் பிபிஓ  நிறுவன ஊழியர்கள் டிசம்பர் 31ம் தேதி வரை வீட்டிலிருந்தே பணிபுரிவதற்கு மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. 

இந்தியாவில் மார்ச் மாதம் கொரோனா பரவல் அதிகமாகும்போது அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிந்து வருகின்றனர். முதலில் இவர்களுக்கு ஏப்ரல் 30ம் தேதி வரை வீட்டிலிருந்து பணிபுரிவதற்கான அனுமதியை மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் அளித்திருந்தது. பின்னர் இந்த காலமானது ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. 

முக்கியமான பணியாளர்களைத் தவிர மீதமுள்ள பணியாளர்கள் அனைவரும் வீட்டில் இருந்து தற்போது வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர்கள் பணியும் தடையின்றி நடைபெற்று வருவதால் பெரும்பாலான நிறுவனங்கள் பணியாளர்களை மீண்டும் நிறுவனத்திற்கு அழைப்பதற்கு விரும்பவில்லை. 

இந்த நிலையில் ஜூலை 31 உடன் காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில், டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நேற்று நடைபெற்ற மாநில தொழில்நுட்பத்துறை அமைச்சர்களுடன் ஆன ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வீட்டிலிருந்தே பணிபுரிவதற்கு டிசம்பர் 31-ம் தேதி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central Govt extend work from home to December 31


கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
Seithipunal