300 பேர் பலி! 14 வருட காத்திருப்பு! ஒருவழியாக மத்திய அரசு வெளியிட்ட மிக மிக முக்கிய அறிவிப்பு! 56825. 07 சதுர கிலோமீட்டர் இனி சூழலியல் உணர்த்திறன் பகுதி!
Central Govt Ecologically Sensitive Areas Announce after Wayanad Landslide
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை சூழலியல் உணர்த்திறன் பகுதியாக அறிவிக்க, ஐந்தாவது வரைவு அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது
இதன்படி கேரளாவில் உள்ள 9993.7 சதுர கிலோமீட்டர் மேற்கு தொடர்ச்சி மலைகள் உணர்திறன் பகுதிகளாக அறிவிக்கப்படுகிறது.
தற்போது நிலச்சரிவு ஏற்பட்டுள்ள வயநாடு பகுதியில் உள்ள 13 கிராமங்களும் உணர்த்திறன் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேலும் கேரளா, தமிழகம் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் உள்ள 56825. 07 சதுர கிலோமீட்டர் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகள் உணர்த்திறன் பகுதிகளாக அறிவிக்க வரைவு அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்த வரைவு அறிக்கை கடந்து வந்த பாதை:
மேற்குத் தொடர்ச்சி மலையின் சுழலமைப்பை காப்பாற்றும் நோக்கில் 2010ஆம் ஆண்டில் மாதவ் காட்கில் குழு அமைக்கப்பட்டது. 2011ஆம் ஆண்டில் அக்குழு அளித்த அறிக்கையில், மராட்டிய மாநிலம் முதல் கேரளா - தமிழ்நாடு வரை மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரின் 1,29,037 சதுர கிலோமீட்டர் பரப்பளவை (75%) 'சூழலியல் உணர்திறன் பகுதியாக' (Ecologically Sensitive Areas - ESA) என அறிவித்து மலை அழிப்பை தடுக்க வேண்டும் என பரிந்துரைத்தது.
இதனை மாநில அரசுகளும், கார்ப்பரேட் முதலாளிகளும் கடுமையாக எதிர்த்ததால், இந்த அறிக்கையை ஆய்வு செய்ய கஸ்தூரிரங்கன் குழுவை அமைத்தனர். அவர் 75% பகுதியை காக்க வேண்டும் என்கிற கோரிக்கையை 50% பகுதியாக குறைத்தார்.
இதனையும் பலரும் ஏற்கவில்லை. கடைசியில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், வெறும் 56,865 சதுர கிலோமீட்டர் (37%) பரப்பளவை ESA பகுதியாக அளிப்பதற்கான 'ஐந்துமுறை திருத்தப்பட்ட' வரைவு அறிவிக்கையை 06.07.2022 அன்று வெளியிட்டது. இந்த வரைவு அறிக்கை இதுவரை Notification ஆக வெளியிடப்படமால் இருந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரை காப்பாற்றுவதற்கான மிக முக்கியமான பரிந்துரை கடந்த 14 ஆண்டுகளாக 'வரைவு' நிலையிலேயே இருந்த நிலையில், இன்றுதான் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
English Summary
Central Govt Ecologically Sensitive Areas Announce after Wayanad Landslide