டிஆர்எப் ஒரு லஷ்கர் இ தொய்பாவின் பினாமி அமைப்பு - மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!
central GOvt declares TRF is terrorist organisation
இந்தியாவில் தடை செய்யப்பட்ட 'லஷ்கர்-இ-தொய்பா' பயங்கரவாத அமைப்பில் பினாமி அமைப்பான 'டிஆர்எப்' (எதிர்ப்பின் முன்னணி)-யை ஒரு பயங்கரவாத அமைப்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த 'டிஆர்எப்' அமைப்பை சட்டவிரோத நடவடிக்கைகள் சட்டத்தின் (தடுப்பு) (உபா) கீழ் பயங்கரவாத அமைப்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
கடந்த 2019-ல் தொடங்கப்பட்ட இந்த 'டிஆர்எப்' அமைப்பு, பயங்கரவாத நடவடிக்கைக்காக ஆன்லைன் ஊடகம் மற்றும் சமூகவலைத்தளம் மூலம் இளைஞர்களை சேர்த்து வருகிறது.

மேலும், பயங்கரவாத நடவடிக்கை, ஆட்சேர்ப்பு, ஊடுருவல், பாகிஸ்தானில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு ஆயுதம், போதைப்பொருள் கடத்தல் ஆகிய நாசகார செயல்களில் இந்த 'டிஆர்எப்' அமைப்பு ஈடுபட்டுள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த 'டிஆர்எப்' பயங்கரவாத அமைப்பின் தலைவன் ஷேக் சஜ்ஜத் குல் உபா சட்டத்தின் கீழ் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
central GOvt declares TRF is terrorist organisation