ஆன்லைன் வகுப்புகளுக்கான நடைமுறை என்ன?... மத்திய அரசு விளக்கம்..!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காக பல வகையில் பள்ளி நிர்வாகங்கள் செயல்பட்டு வருகிறது. இதற்காக இணையதள வகுப்புகளும் நடைபெற்று வருகிறது. 

இந்த இணையதள வகுப்பு வசதி படைத்துள்ள மாணவர்களுக்கு மட்டுமே சாத்தியமாகும் விஷயம் என்றும், ஏழை மக்களுக்கு இது எப்படி சாத்தியமாகும்? என்ற கேள்வியும் ஒருபுறம் எழுந்து வந்தது. மேலும், வகுப்பறையில் நேரடியாக நடத்தப்படும் வகுப்புகளை போல இணையதள வகுப்புகள் மாணவர்களுக்கு பலனை அளிக்காது என்றும் பலரும் கூறி வருகின்றனர்.

மேலும், இணையதள வகுப்புகளுக்கான கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே கூறியிருந்தது. இந்த நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணையதள வகுப்புகளுக்கான கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது. 

இதில், மழலையர்களுக்கான பள்ளிகளில் இணையதள வகுப்புகள் மாணவர்களுக்கு நாளொன்றுக்கு 30 நிமிடம் நடத்த வேண்டும். ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 45 நிமிடத்திற்கு மிகாமல் 2 இணைய வகுப்புகளை நடத்தலாம். 

9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தலா 45 நிமிடங்களுக்கு மிகாமல், 4 இணையவழி வகுப்புகளை நடத்தலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central govt announcement about online classes


கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
Seithipunal