கொரோனா தடுப்பூசி யாருக்கெல்லாம் ஓகே?.. யாருக்கெல்லாம் நாட் ஓகே?.. மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸ் நோயினை கட்டுக்குள் வைக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தியாவிலேயே தயார் செய்யப்பட்ட கோவேக்சின் தடுப்பூசி மற்றும் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கோவிட்ஷீல்டு தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

தடுப்பூசியை யார் யாரெல்லாம் செலுத்திக்கொள்ளலாம்?, யார் யாரெல்லாம் செலுத்த கூடாது? என்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்த வேண்டும். 

தடுப்பூசி மருந்து ஒரு டோஸ் கொடுத்தால், அதன் பிறகு பதினான்கு நாட்கள் கழித்து அடுத்த டோஸ் கொடுக்கப் படவேண்டும். முதலில் எந்த வகை தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டதோ, அதே வகை தடுப்பு மருந்து அடுத்த டோஸில் 14 நாட்கள் கழித்து கொடுக்கப்பட வேண்டும். 

தடுப்பூசி மருந்துகளை மாற்றி கொடுத்து விடக்கூடாது. குறிப்பிட்ட மருந்துகள், உணவு பொருட்கள், தடுப்பு மருந்துகள் அல்லது ஊசி மருந்துகளால் ஒவ்வாமை ஏற்படக் கூடியவர்கள், தடுப்பு மருந்து ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இரண்டாவது டோஸ் போடக்கூடாது. 

கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பு ஊசி போடக் கூடாது. கொரோனா வைரஸ் நோய் தொற்று உள்ளவர்கள், பிளாஸ்மா சிகிச்சை பெற்றவர்கள், நோயால் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருப்பவர்களுக்கு தடுப்பூசி போடக்கூடாது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central Govt Announce Whom Possible to Inject Corona Vaccine


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->