22 ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு தடை - மத்திய அரசு அதிரடி.! - Seithipunal
Seithipunal


90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கு நாளை மற்றும் 17-ந் தேதி என்று இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதனால், அரசியல் காட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வந்தனர். மாநிலம் முழுவதும் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில், ஆன்லைன் சூதாட்ட செயலி நிறுவனங்கள் நிதி மோசடியில் ஈடுபட்டு வருவதை அமலாக்கத்துறை கண்டுபிடித்து உள்ளது. அதிலும், குறிப்பாக மகாதேவ் என்ற சூதாட்ட செயலி நிறுவனத்தின் மோசடி தொடர்பாக சத்தீஷ்கரில் அமலாக்கத்துறை அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட செயலிகளை தடை செய்ய மத்திய அரசுக்கு அமலாக்கத்துறை வேண்டுகோள் விடுத்தது. அதனை ஏற்று கொண்ட மத்திய அரசு மகாதேவ் செயலி உள்பட 22 ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு அதிரடியாக தடை விதித்து உள்ளது. 

இது தொடர்பான உத்தரவை வெளியிட்டு இருப்பதாக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக சத்தீஷ்கரில் மகாதேவ் சூதாட்ட நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.5.39 கோடி பணம் அமலாக்கத்துறையிடம் சிக்கியது. 

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அந்த பணம் முதலமைச்சர் பூபேஷ் பாகேலுக்கு தேர்தல் செலவுக்கு வழங்க இருந்ததாக தெரியவந்தது. இது சம்பந்தமாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

central government ban 22 online games app


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->