ஜாதிவாரி மற்றும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-இல்: மத்திய அரசு அறிவிப்பு..! 
                                    
                                    
                                   Central government announces caste and national population census 2027
 
                                 
                               
                                
                                      
                                            கடந்த 2021-ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு, நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், கோவிட்-19 தொற்று நோய் காரணமாக, ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது, ஜாதிவாரி கணக்கெடுப்பு பணியுடன் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, வரும் 2027 மார்ச் 01 அன்று தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் கூடியது. இதன் போது அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாதி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, ஜாதிவாரி கணக்கெடுப்பு பணியுடன் மார்ச் 01, 2027 அன்று தொடங்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இரண்டு கட்டமாக இந்த பணி மேற்கொள்ளப்படும். ஜம்மு காஷ்மீர், லடாக் மற்றும் உத்தரகண்டில், இந்த செயல்முறை அக்டோபர் 2026 முதல் முன்னதாகவே தொடங்கும் என்றும் திட்டமிடப்பட்டுள்ளது.
நாட்டில் கடைசியாக, 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த கணக்கெடுப்பும் இரண்டு கட்டமாக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
                                     
                                 
                   
                       English Summary
                       Central government announces caste and national population census 2027