சி.பி.எஸ்.இ. 10 & 12 ஆம் வகுப்பு வைரல் புகைப்பட பருவத்தேர்வு தேதிகள் போலியானது - சி.பி.எஸ்.இ விளக்கம்.! - Seithipunal
Seithipunal


சமூக வலைத்தளங்களில் வைரலாகும் சி.பி.எஸ்.இ. 10 & 12 ஆம் வகுப்பு பருவத்தேர்வு தேதிகள் அதிகாரப்பூர்வமற்றது என சி.பி.எஸ்.இ தெரிவித்துள்ளது.

சி.பி.எஸ்.இ 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பருவத்தேர்வுகள் நடைபெறவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் அரசின் அதிகாரபூர்வமற்ற அறிவிப்பு தொடர்பான புகைப்படம் பெரும் வைரலானது. இதனைக்கண்ட மாணவர்கள் தேர்வுகளுக்கு தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டது என நம்ப தொடங்கினர்.

இந்நிலையில், சி.பி.எஸ்.இ தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ பருவத்தேர்வுகள் குறித்து தற்போது வரை அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளியிடப்படவில்லை. 

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் போலியான பருவ தேர்வுகள் குறித்த பட்டியலை நம்பி ஏமாற வேண்டாம். பருவத்தேர்வுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு, அரசின் சமூக வலைதள பக்கங்கள் மற்றும் செய்தி ஊடகங்கள் வாயிலாக தெரிவிக்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CBSE Declare Social Media Trend about Fake Image of CBSE 10 th and 12 th Standard Exam Date


கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,Advertisement

கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,
Seithipunal