#Breaking: CBSE 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடும் முறை அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை காரணமாக சி.பி.எஸ்.இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இரத்து செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து, அவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறைகள் குறித்து கேள்விகள் எழுந்தது. இந்த விஷயம் தொடர்பாக டெல்லி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்படவே, இரண்டு வாரத்திற்குள் மத்திய அரசு மதிப்பெண் கணக்கீடு முறைகள் தொடர்பாக தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தது.

இந்நிலையில், பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளுக்கு தரம் / மதிப்பெண்கள் வழங்குவதற்கான மதிப்பீட்டு அளவுகோல்களை சி.பி.எஸ்.இ உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இதன்படி, " பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புக்கு, காலத் தேர்வுகளில் 5 தாள்களில் 3 இல் சிறந்த மதிப்பெண்கள் பரிசீலிக்கப்படும். 

பன்னிரெண்டாம் வகுப்பிற்கு, அலகு, கால (Unit and Term, Half Year, Revesion Exams) மற்றும் நடைமுறைகளில் பெறப்பட்ட மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். பன்னிரெண்டாம் வகுப்பு முடிவுகள், 10 ஆம் வகுப்பு மதிப்பெண் (30%), 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு (40%) ஆகியவற்றின் செயல்திறன் மதிப்பெண் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CBSE 12 th Exam Score Calculating Method Announced 17 June 2021


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->