புற்று எச்சரிக்கை மணி! 1 ஆண்டில் 72,000 பேர் கூடுதல் பாதிப்பு...! – மத்திய அரசு அதிர்ச்சி தகவல்
Cancer alert 72000 more people affected 1 year Shocking information from Central Government
பாராளுமன்றத்தின் பரபரப்பான குளிர்காலக் கூட்டத் தொடர் டிசம்பர் 1 முதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த அமர்வில் மாநிலங்களவையில் புற்றுநோய் பாதிப்பு குறித்து முக்கிய கேள்வி எழுந்தது. எம்.பி. நீரஜ் முன்வைத்த இந்த கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பிரதாப் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

அதில் அவர் கூறியதாவது,"நாடு முழுவதும் புற்றுநோய் பாதிப்பு ஆண்டுதோறும் அச்சுறுத்தும் அளவில் அதிகரித்து வருகிறது.
2022-ஆம் ஆண்டில் 14.61 லட்சமாக இருந்த பாதிப்பு எண்ணிக்கை, 2023-ல் 15.33 லட்சமாக உயர்ந்துள்ளது. இது மக்களிடையே மிகப் பெரிய சுகாதார எச்சரிக்கையை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.
தமிழ்நாட்டிலேயே ஆண்டுதோறும் சராசரியாக 2,500க்கும் மேற்பட்டோர் புதிய புற்றுநோய் நோயாளிகளாக பதிவு செய்யப்படுகின்றனர்,” என்று அவர் தகவல் வெளியிட்டார்.
English Summary
Cancer alert 72000 more people affected 1 year Shocking information from Central Government