உத்தரகாண்ட்.! பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25 ஆக உயர்வு.! 5 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


உத்தரகாண்டில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் இருந்து 28 பக்தர்களுடன் உத்தரகாண்ட் மாநிலம் யமுனோத்ரியை நோக்கி பேருந்து சென்றது.

அப்பொழுது உத்தரகாஷி மாவட்டத்தில் உள்ள டாம்டா பகுதி அருகே உள்ள மலைப் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

இதைத்தொடர்ந்து உத்தரகாண்டில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்திருந்தார்.

மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து உத்தரகாண்ட் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய பிரதேச அரசு சார்பில், தலா 5 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bus accident in uttarakhand


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->