விரைவில் புல்லட் ரெயில் சேவை..சந்திரபாபு நாயுடு உறுதி!
Bullet train service coming soonChandrababu Naidu confirms
‘தென் இந்தியாவில் விரைவில் புல்லட் ரெயில் சேவை தொடங்கும் என்று முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.மேலும் அந்த சேவைக்கான சர்வே பணிகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நம் நாட்டில் நீண்ட தூர பயணங்களுக்கு முக்கிய பலமாக விளங்கி வருவது ரயில் பயணம் தான். அப்படிப்பட்ட ரயில் பயணங்களை மேற்கொள்ளும் பயணிகள் சிரமம் இல்லாமல் குறைந்த மணி நேரத்தில் சென்றுவர தற்போது அதிநவீன ரயில் சேவைகளை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி அதனை செயல்படுத்தி வருகிறது. வந்தே பாரத், மெட்ரோ ரயில், புல்லட் ரயில் என இந்தியாவில் ரயில் சேவை வழங்க ரயில்வே துறை முடிவு செய்து தற்போது அதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. ஒரு சில பெரிய நகரங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.இந்தநிலையில் புல்லட் ரயில் சேவையானது விரைவில் துவங்கும் என்று ஆந்திர மாநில முதல் அமைச்சர் சந்திர பாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்திய உணவு உற்பத்தி உச்சிமாநாட்டில் அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“"விரைவில் தென் இந்தியாவில் புல்லட் ரெயில் சேவை தொடங்க உள்ளது. அதற்கான சர்வே பணிகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத், சென்னை, அமராவதி, மற்றும் பெங்களூரு ஆகிய 4 நகரங்களில் உள்ள சுமார் 5 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு புல்லட் ரெயில் சேவை பயன்படும்.
புல்லட் ரெயில் சேவை மட்டுமின்றி, ஆந்திர மாநிலத்தின் சாலைகள் மிகப்பெரிய அளவில் மேம்படுத்தப்பட உள்ளன. புறநகர் பகுதிகளில் உள்ள சாலைகள் கூட சர்வதேச தரத்திற்கு இணையாக தரம் உயர்த்தப்படும்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
English Summary
Bullet train service coming soonChandrababu Naidu confirms