உயிரிழந்த சகோதரியின் நினைவாக சிலை வைத்து ரக்‌ஷா பந்தன் கொண்டாடிய சகோதரர்கள்.! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதியை சேர்ந்த சிவா என்பவருக்கு ராஜா என்ற சகோதரரும், வரலட்சுமி மற்றும் மணி என்ற 29 வயதுடைய சகோதரிகளும் உள்ளனர் . இரண்டு சகோதரிகளுக்கு திருமணம் ஆன நிலையில் , மணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தார் .

உயிரிழந்த மணிக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், தங்களது இறந்த சகோதரி மணியின் நினைவாக ரக்ஷா பந்தன் அன்று ஒரு சிலையை நிறுவ சகோதர்கள் திட்டமிட்டனர்.

அதன்படி, 2 சகோதரர்களும் அவர்களது மூத்த சகோதரி வரலட்சுமியும் சேர்ந்து மணியின் சிலையை சுமார் 1.5 லட்சம் செலவில் உருவாக்கினர். மேலும் இந்த சிலையை காக்கிநாடா பகுதியில் ஊர்வலமாக எடுத்து சென்று விழிப்புணர்வும் நடத்தினர்.

தங்களது சகோதரிக்கு நடந்த நிலைமை வேறு எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாது என்று அவரின் சிலையை ஊர்வலமாக எடுத்து சென்றனர். அதோடு அங்கு ஒவ்வொரு பெண்ணும் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும் என்ற வாசகம் அடங்கிய ஃப்ளெக்ஸ் பேனர்களும் வைக்கப்பட்டிருந்தன.

இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இவர்களது அண்ணன்-தங்கை பாசம் பலரையும் கண்கலங்க செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Brothers celebrated Raksha Bandhan with an idol in memory of their deceased sister


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->