குடும்ப அட்டைக்கு ப்ராண்டட் சரக்கு இலவசம்.! பரப்பரப்பைக் கிளப்பிய வேட்பாளரின் வாக்குறுதி.!  
                                    
                                    
                                   branded liquor to ration card maharastra woman candidate promise
 
                                 
                               
                                
                                      
                                            மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சந்திராபூர் மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த பெண் வேட்பாளர் வனிதா ராவத் பேசியதாவது:- "வேலையின்மை பிரச்சினை மற்றும் மது அருந்துதல் இரண்டையும் ஒரே நேரத்தில் சமாளிக்கும் நோக்கத்துடன் வேலையில்லாத இளைஞர்களுக்கு மதுபான ஒப்பந்தங்களை வழங்குவேன். 

வனிதா வழங்கியுள்ள வாக்குறுதியின் முக்கிய அம்சமே மலிவு விலையில், குறிப்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய பின்னணியில் உள்ள தனிநபர்களுக்கு தரமான மதுபானங்களை வழங்க வேண்டும். பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியுள்ள மக்கள் பெரும்பாலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உள்ளூர் மதுபானங்களை உட்கொள்கின்றனர். 
அதனால் அவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. ஆகவே, பிராண்டட் மதுபானங்களை மானிய விலையில் வழங்குவதன் மூலம் பின்தங்கிய மக்களின் மனதை குளிர்விப்பதோடு, கண்மூடித்தனமாக மது அருந்துவதால் ஏற்படும் எதிர்மறையான சமூகத் தாக்கங்களை களைப்பதே நோக்கம். இந்த வாக்குறுதி அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. 
                                     
                                 
                   
                       English Summary
                       branded liquor to ration card maharastra woman candidate promise