காதலிக்கு வற்புறுத்தி கல்யாண முயற்சி.! பின் அரங்கேறிய கொடூர சம்பவம்.!  - Seithipunal
Seithipunal


பெங்களூரு பகுதியில் இருக்கும் பிரபல ரவுடி அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண் இவரை காதலித்துள்ளார். அபி கவுடாவும் அந்த பெண்ணை மனப்பூர்வமாக காதலித்துள்ளார். அந்தப் பெண்ணைப் பார்க்க தினமும் பிரகாஷ் நகருக்கு அபி வருவது வழக்கம். கடந்த வாரம் தன்னுடைய ஆசை காதலியை பார்க்க அபி வந்த பொழுது கையில் தாலியை எடுத்து வந்து சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்துள்ளார்.

அருகில் இருந்த ஹோட்டலில் டின்னர் சாப்பிட்டு முடித்ததும் தனது காதலியிடம் கையிலிருக்கும் தாலியை காட்டி கட்ட முயற்சித்துள்ளார். ஆனால், அந்தப் பெண்ணோ நான் பொழுதுபோக்காக தான் உன்னை காதலித்தேன். தாலி எல்லாம் கட்டிக்க முடியாது, என்று கூறியுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த அபி மீண்டும் முயற்சித்துள்ளார். ஆனால், அந்தப் பெண் தீவிரமாக எதிர்ப்பு காட்டியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அபி மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அந்த பெண்ணை வெட்டி இருக்கின்றார். பலத்த காயத்தினால் அந்த பெண் ரத்த வெள்ளத்தில் மிதந்து அங்கேயே உயிரிழந்து இருக்கின்றார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அபியை தேடி வருகின்றனர் .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

boy friend killed his lover in bengaluru


கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
Seithipunal