மக்கள்தொகை கட்டுப்பாடு மசோதா., எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்து எம்.பி., பரபரப்பு பேட்டி.!  - Seithipunal
Seithipunal


பாஜக எம்.பி.ரவி கிஷண், தனிநபர் மசோதாவாக மக்கள்தொகை கட்டுப்பாடு தொடர்பான ஒரு மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளார்.

சில நாட்களுக்குமுன் மாநிலங்களவையில் பேசிய மத்திய அமைச்சர் பாரதி பிரவீண் பவார், "நாட்டில் பெருகி வரும் மக்கள்தொகையைக கட்டுப்படுத்தும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை’’ என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில பாஜக எம்.பி.ரவி கிஷண், மக்கள்தொகை கட்டுப்பாட்டு மசோதாவை, தனி நபர் மசோதாவாக தாக்கல் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். 

இதுகுறித்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவிக்கையில், 

"நம் நாட்டில் மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் நமக்கு ஏற்பட்டுள்ளது. 

இதற்காக நாடாளுமன்றத்தில் மக்கள் தொகை கட்டுப்பாட்டு மசோதாவை கொண்டு வந்து, நாட்டில் அமல்படுத்தும் போது உலகுக்கே இந்திய வழிகாட்டும் குருவாக மாறலாம்.

ஆகவே, இந்த மக்கள் தொகை கட்டுப்பாட்டு மசோதாவை நான் தாக்கல் செய்ய எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும். இதன் மீது விவாதம் நடத்த அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம். இந்த மசோதாவின் சிறப்பம்சங்கள் குறித்து எம்.பி.,க்கள் காது கொடுத்து கேட்க வேண்டும்" என்று ரவி கிஷண் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP MP Ravi Kishan introduce a bill on population control Lok Sabha


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->