கட்சி ஆபீஸ்னு நெனப்பு போல! நாடாளுமன்றத்தில் குறட்டைவிட்டு தூங்கிய ராகுல்! என கேலி கிண்டல் செய்யும் பாஜகவினர்! - Seithipunal
Seithipunal


எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி  நாடாளுமன்றத்தில் தூங்குவது போன்ற புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூகவலைதங்களில் பாஜகவினர் வெளியிட்டு கேலி செய்து வருகின்றனர்.

இந்தியாவில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற மக்களவை கூட்டத்தில்  வக்பு திருத்தச்சட்டம் தாக்கல் செய்து மத்திய பாராளுமன்ற மற்றும் சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ உரையாற்றினார்.

அப்போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி  எதிர்திசையில் அமர்ந்திருந்தார். அவருடன் எதிர்க்கட்சி எம்பிகள் அனைவரும் அமர்ந்திருந்தனர். வக்பு சட்ட திருத்த மசோதாவை மத்திய பாராளுமன்ற மற்றும் சிறுபான்மையினை விவகாரங்கள் துறை அமைச்சர் தாக்கல் செய்தார்.

அது குறித்து அமைச்சர்  கிரண் ரிஜிஜூ பேசிக் கொண்டிருந்தபோது, ராகுல் காந்தி கண்களை மூடி தூங்கும் நிலையில் அமர்ந்திருந்தார். இத்தனை பார்த்த கிரண்  பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி உறங்கிக் கொண்டிருப்பதை கவனித்து உரையை நிறுத்திவிட்டு அதனை பாராளுமன்றத்தில் சுட்டிக் காட்டினார்.

இதனைக் கேட்ட பாஜக எம்.பிகள் ராகுல் காந்தியை கிண்டல் செய்யும் வகையில் தொடர்ந்து சிரித்துக் கொண்டிருந்ததால் பாராளுமன்றத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் தூங்கும்  நிலையில் உள்ள அந்த வீடியோ காட்சிகளையும் புகைப்படங்களையும் பாஜக மற்றும் வலதுசாரி ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கேலி கிண்டல் செய்து வருகின்றனர். இதற்கு இடதுசாரிகளின் அமைப்பு சேர்ந்தவர்களும் காங்கிரஸ் தொண்டர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP mocks opposition leader Rahul Gandhi by posting photos and videos of him sleeping in Parliament on social media


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->