இந்தியாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவர்களை பாதயாத்திரையில் சேர்த்துள்ளார் ராகுல்காந்தி -  மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி..! - Seithipunal
Seithipunal


பெங்களூருவில் பாரதிய ஜனதா கட்சியின் சாதனை விளக்க மாநாடு நடைபெற்றது அந்த மாநாட்டில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி பேசியதாவது:- 

மத்தியா பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பின்பு அனைத்து மாநிலத்திற்கும் பாரபட்சம் பார்க்காமல் நிதி ஒதுக்கி வருகிறது. கொரோனாவுக்கு எதிரான போரில் நமது நாட்டிலேயே தடுப்பூசி தயாரிக்கப்பட்டது. இதற்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் மக்களிடம் பிரசாரம் செய்திருந்தாா்கள். 

ராகுல்காந்தி, "பாரத் ஜோடா" என்ற பெயரில் இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார். இது எனக்கு மிகுந்த அதிர்ச்சியை கொடுத்தது. இந்தியாவை பிளவுப்படுத்தும் நோக்கத்தில் ராகுல்காந்தி பாதயாத்திரை தொடங்கி இருக்கிறார். 

இந்தியாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவர்களை பாதயாத்திரையில் சேர்த்துள்ளனர். இது தேசத்துரோகத்திற்கு சமமானது. அவரது பாதயாத்திரை இந்தியாவுக்கு எதிரானதாகும். அதிகார பசிக்காக இந்த பாதயாத்திரையை ராகுல்காந்தி நடத்துகிறார் என்று மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp Achievement Presentation Conference near banglore


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->