ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு நடத்த வனத்துறை முடிவு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இரண்டாம் கட்ட ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு வரும் 12 மற்றும் 13 தேதிகளில் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பறவைகள் கணக்கெடுப்பு மூன்று கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது.

10 கடலோர மாவட்டங்களில் உள்ள 14 இடங்களில் ஜனவரி 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் முதல்கட்ட கணக்கெடுப்பு நடைபெற்றது. இந்த கணக்கெடுப்பில் 80 வகையான 10 லட்சம் பறவைகள் இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

அடுத்தது இரண்டாம் கட்டமாக 22 மாவட்டங்களில் 311 நீர்நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 97 இடங்களில் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

சென்னையில் உள்ள 28 நீர்நிலைகளிலும் இந்த பறவைகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் தன்னார்வலர்கள், கல்விநிறுவனங்கள், வனத்துறை களப்பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Birds census


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->