அரசு உயரதிகாரியை கடுமையாக தாக்கிய மர்ம நபர்கள்: ஆர்ப்பாட்டத்தில் பிஜூ ஜனதா தள தொண்டர்கள்..!
Biju Janata Dal workers protest against mysterious persons who severely attacked a government official
ஒடிசாவில் கூடுதல் செயலாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி ஒருவர் பணியில் இருந்த போது கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரத்னாகர் சாஹூ என்பவர் அலுவலத்தில் வேலை செய்து கொண்டு இருந்த போது உள்ளே புகுந்த சில மர்ம நபர்கள் அவரை கடுமையாக அடித்து, தாக்கி அலுவலகத்தில் இருந்து வெளியே இழுத்து போட்டுள்ளனர். இந்த சம்பவம் பற்றிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவத்திற்கு அம்மாநில முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன், பா.ஜ.க. பிரமுகரின் முன்னிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், அந்த பிரமுகருக்கு கட்சி எம்.எல்.ஏ.வுடன் தொடர்பு உள்ளது. அந்த அரசு அதிகாரி, பட்டப்பகலில் மக்களின் குறைகளை கேட்டு கொண்டிருந்தபோது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பிஜூ ஜனதா தள தொண்டர்கள் இன்றிரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை போலீசார் கைது செய்துள்ளதோடு, இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்புடைய நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என டி.சி.பி. பிரகாஷ் சந்திரா கூறியுள்ளார்.
English Summary
Biju Janata Dal workers protest against mysterious persons who severely attacked a government official