மயங்கி விழுந்த பெண்! காப்பாற்ற வந்த ஆம்புலன்சில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை! பீகாரில் பெரும் கொடூரம்!
Bihar Ambulance young woman abused
பீகார் மாநிலம் புத்தகயா மாவட்டத்தில் கடந்த ஜூலை 24ம் தேதி ஊர்காவல் படையின் உடல் தகுதி தேர்வில் பங்கேற்ற 26 வயது பெண் ஒருவர் தேர்வின்போது மயங்கி விழுந்தார்.
உடனே அவரை ஆம்புலன்சில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அதே ஆம்புலன்சில் பயணித்த ஊழியர்கள் அவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். அவரின் அந்த புகாரில், சுயநினைவு இழந்த நிலையிலேயே ஆம்புலன்சில் இருந்த மூன்று அல்லது நான்கு பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரியவந்தது.
தன்னை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போதே பலாத்காரம் நடந்தது என அந்த பெண் கூறியுள்ளார். பின்னர், சம்பவம் குறித்து காவல்துறை மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து புத்தகயா காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்காக சிறப்பு குழுவும், தடயவியல் குழுவும் அமைக்கப்பட்டன.
குற்றச்செய்தியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வினய் குமார் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் அஜித் குமார் இருவரும் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Bihar Ambulance young woman abused