பள்ளிபாடத்தில் பகவத்கீதை.. அரசு அதிரடி அறிவிப்பு.. எதிர்கட்சிகள் வரவேற்பு..! - Seithipunal
Seithipunal


6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் பகவத் கீதையை சேர்க்க குஜராத் அரசு முடிவு செய்துள்ளது.

இந்துக்களின் புனித நூலாக கருதப்படும் பகவத் கீதையை 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் சேர்க்க குஜராத் அரசு முடிவெடுத்துள்ளது. இது குறித்து அம்மாநில அரசு சுற்றறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில்,

மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு உகந்த வகையில் இந்திய கலாச்சாரம் மற்றும் அறிவியலை அவர்களின் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான பாடத் திட்டங்களில் கதைகள் மற்றும் பாராயணம் போன்ற வடிவங்களில் பகவத்கீதை அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு பகவத் கீதையின் முக்கியத்துவம் பற்றி கூறப்படும். பின்னர் ஸ்லோகங்கள் கதைகள் பாடல்கள் கட்டுரைகள் என பல வடிவங்களில் பகவத்கீதை அறிமுகப்படுத்தப்படும். மேலும் ஒளிவடிவில் பகவத்கீதை பாடத்திட்டம் பல வேண்டும் இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பிற்கு காங்கிரஸ் , ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வரவேற்பு அளித்துள்ளது குறிப்பிடதக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bhagavad Gita in school curriculum


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->