பெங்களுரூ டூ சபரிமலை: கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் அதிரடி அறிவிப்பு!
Bengaluru to Sabarimala bus Karnataka Government Transport Corporation
பெங்களூருவில் இருந்து சபரிமலைக்கு வருகின்ற டிசம்பர் 1ஆம் தேதி முதல் சொகுசு பேருந்து இயக்கப்படும் என கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
கேரளா, சபரிமலையில் மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16ஆம் தேதி ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. ஜனவரி 1ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலை ஐயப்பனை தரிசிக்க செல்வர்.

இந்நிலையில் பெங்களூருவில் இருந்து சபரிமலைக்கு டிசம்பர் 1ஆம் தேதி முதல் சொகுசு பேருந்து இயக்கப்படும் என கர்நாடகா அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
சாந்திநகரா பேருந்து நிலையத்திலிருந்து மதியம் 1.50 மணிக்கு புறப்படும் பேருந்து மறுநாள் காலை 6.45 மணிக்கு நிலக்கல் சென்றடையும்.
பின்னர் அங்கிருந்து மாலை 6 மணிக்கு பேருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் ஒருவருக்கு பயண சீட்டு கட்டணமாக ரூ. 1600 வசூலிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Bengaluru to Sabarimala bus Karnataka Government Transport Corporation