திடீர் தொழில்நுட்ப கோளாறு: பாங்காக் விமானம் ஓடுபாதையில் நிறுத்தம்: 130 பயணிகள் அவஸ்த்தை..!
Bangkok bound plane stalls on runway due to sudden technical glitch
கோல்கட்டாவில் இருந்து பாங்காக் புறப்பட இருந்த லயன் ஏர் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் 130 பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
கோல்கட்டா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பாங்காக் நோக்கி, தாய்லாந்து நாட்டின் லயன் ஏர் நிறுவன விமானம் புறப்பட தயாரானது. போயிங் தயாரிப்பான 737-800 மாடலை சேர்ந்த இந்த விமானத்தில்,130 பயணிகள் மற்றும் ஏழு பணியாளர்கள் உடன் புறப்பட தயாரானது.

விமானம் புறப்படும் நேரத்தில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்ததால், விமானம் ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது. தக்க நேரத்தில் தொழில்நுட்ப பிரச்னை கண்டறியப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணியில் தொழில் நுட்ப நிபுணர்கள் ஈடுபட்டனர். ஆனால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. தாய்லாந்திலிருந்து பொறியாளர்கள் வரவழைக்கப்பட வேண்டும் என்பது தெளிவாகத் தெரிந்ததும், விமானத்தில் இருந்த 130 பயணிகளும் இறக்கி விடப்பட்ட்டுள்ளனர். இதையடுத்து குறித்த விமான சேவை ரத்து செய்யப்படுவதாக விமான நிறுவனம் அறிவித்தது. இதனால் 130 பயணிகளும் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: விமானம் நாளை அதிகாலை 02.30 மணியளவில் பாங்காக்கிற்கு புறப்படும் என்றும், தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்யும் பணி நடந்து வருகிறதாக குறிப்பிட்டுள்ளது.
English Summary
Bangkok bound plane stalls on runway due to sudden technical glitch