பெங்களூர் - பாண்டிச்சேரி பேருந்து போக்குவரத்து துவக்கம்... விதிமுறைகள் அறிவிப்பு.!
Bangalore to Pondicherry Bus Service Starts 23 October 2020
கர்நாடக மாநிலத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு கர்நாடக அரசு போக்குவரத்து கழகமான கே.எஸ்.ஆர்.டி.சி மூலமாக தினமும் ஆயிரத்திற்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா பரவல் காரணமாக போக்குவரத்துகளுக்கு கட்டுப்பாடுகள் இருக்கிறது.
பலகட்ட தளர்வுகளுக்கு பின்னர் கர்நாடக மாநில பேருந்துகள் ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா மற்றும் கேரள மாநிலங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வந்தது. தமிழகம் மற்றும் புதுவையில் கொரோனா பாதிப்பு காரணமாக மாநில அரசுகள் வெளிமாநில பொதுப்போக்குவரத்தை இயக்க அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்தது.
இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்திற்கு கர்நாடக அரசு பேருந்துகளை இயக்க கே.ஆர்.எஸ்.டி.சி முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான செய்திக்குறிப்பில், " கொரோனா வைரஸின் பரவல் காரணமாக கர்நாடக மாநிலத்தில் இருந்து புதுவைக்கு இயக்கப்பட்டு வந்த பேருந்து சேவை நிறுத்தப்பட்டது.

இந்த பேருந்து சேவை வரும் அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளது. பெங்களூரில் இருந்து நாளை முதல் புதுச்சேரிக்கு பேருந்துகள் இயக்கப்படும். பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும்.
பேருந்துகளில் பயணம் செய்ய www.ksrtc.in என்ற இணையதள முகவரியின் மூலமாக பயணசீட்டுகளை முன்பதிவு செய்து பயணிகள் பேருந்தில் பயணம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இருந்து புதுச்சேரிக்கு கட்டாயம் தமிழகம் வழியாகத்தான் பயணம் செய்ய வேண்டும் என்ற சூழல் இருக்கிறது. இதனால் தமிழகத்திலும் வெளிமாநில பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Bangalore to Pondicherry Bus Service Starts 23 October 2020