மொத்தம் 13 நாட்கள் நடைபெறும், பெங்களூர் கரக திருவிழா.!
Bangalore Karaga 2022
பெங்களூரில் நடைபெறும் கரக திருவிழா குறித்து பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ்குப்தா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது,
"தொடந்து 11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவிற்கு மாநகராட்சி சார்பில் 50 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பக்தர்களுக்கு தற்காலிக கழிவறை கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

திருவிழாவின் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் வாகனங்கள் அனைத்தும் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, காவல்துறை பாதுகாப்பும் அளிக்கப்பட்டுளள்து." என்று பெங்களூர் மாநகராட்சி தலைமை கமிஷனர் தெரிவித்தார்.
மேலும், இது குறித்து பெங்களூர் நகர மாவட்ட ஆட்சியர் மஞ்சுநாத் தெரிவிக்கையில், "நேற்று இரவு கரக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று முதல் 12-ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.

13-ம் தேதி ஆராதனை தீபங்கள், 14-ந் தேதி பச்சை கரக நிகழ்ச்சியும் 15-ம் தேதி பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும்,16-ம் தேதி கரக சக்தியோத்சவ ஊர்வலமும், 17-ம் தேதி புராதன சேவையும், 18-ம் தேதி வசந்தோத்சவ நிகழ்ச்சியும் நடக்க இருக்கிறது". என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.