46 வயது மணமகன், 14 வயது மணமகள்.. பெங்களூரை அதிரவைத்த திருமணம்.!
Bangalore child marriage issue Groom arrested
பெங்களூருவின் யெலஹங்காவில் குழந்தை திருமணம் செய்ததாக குற்றச்சாட்டப்பட்டதில் 46 வயது ஆணும், 14 வயது சிறுமியின் பெற்றோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கர்நாடக போலீஸ் தெரிவித்த தகவலின் படி, "பள்ளிப் படிப்பை ஏழ்மையின் காரணமாக பாதியில் நிறுத்திய அந்த 14 வயது சிறுமி, குழந்தைகள் நலக் குழுவில் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். தற்போது அவர் பெங்களூரு வில்சன் கார்டனில் இருக்கும் அரசு காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சிறுமியை 'திருமணம்' செய்தவர் என்.குருபிரசாத் என்பவருக்கு 46 வயது ஆகின்றது. மீட்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் தினக்கூலி தொழிலாளர்களாக இருக்கின்றனர்.

குருபிரசாத் சிறுமியின் பெற்றோரிடம் சென்று அவர்களது ஏழ்மையை பயன்படுத்தி 15,000 ரூபாய் பணம் கொடுத்து அந்த சிறுமியை திருமணம் செய்துக்கொண்டுள்ளார். 3 பெண் குழந்தைகள் இருந்ததால், வறுமையை காரணம் காட்டி 14 வயது சிறுமிக்கு 46 வயது ஆணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
English Summary
Bangalore child marriage issue Groom arrested