விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடை மேலும் 5 ஆண்டு நீட்டிப்பு.!
ban on viduthalai pulikal extra five years
இலங்கையில் புலிகள் இயக்கத்துக்கு எதிரான போரில் அந்நாட்டு ராணுவம் வெற்றி பெற்றதை அடுத்து, புலிகள் இயக்கத்தை முற்றிலுமாக அழித்துவிட்டதாக அந்த நாடு கூறிவருகிறது. இருப்பினும் தனி ஈழம் அமைப்பதற்கான முயற்சிகளில் அந்த அமைப்பின் ஆதரவாளர்கள் வெளிநாடுகளில் ஒன்று கூடி செயல்பட்டு வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக இந்தியாவில், தமிழகத்தில் அதற்கான ஆதரவு அதிகம் திரட்டப்படுகிறது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் அந்த அமைப்புக்கான தடையை 2024-ம் ஆண்டு வரை நீட்டித்துள்ளது.
இந்த நிலையில், விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடையை மீண்டும் ஐந்தாண்டுகள் நீட்டித்தது மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
English Summary
ban on viduthalai pulikal extra five years