ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு.. ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்.!
Ayyappan temple open in today evening
கேரளாவில் வருகிற 8-ம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட இருக்கின்றது. இதனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகின்றது.
கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைக்கின்றார். வரும் 10ம் தேதி வரை கோவிலில் பூஜைகள் வழக்கம் போல் நடைபெறுகின்றது.
இந்த நிலையில் மாத பூஜை காலங்களைப் போலவே நெய்யபிஷேகம், கலச பூஜை, கலவ பூஜை, சகஸ்ர கலச பூஜை, படி பூஜை என அனைத்து பூஜைகளும் நடைபெறுகிறது.

மேலும், ஐயப்பன் கோவிலில் செப்டம்பர் 8-ம் தேதி ஓணம் சிறப்பு வழிபாடு மற்றும் ஓண சத்யா நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது. இதற்கான ஏற்பாடுகளை திருவிதாங்கூர் தேவஸ்தானம் செய்துள்ளது.
இந்த நிலையில் சாமி தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று முதல் 10 ஆம் தேதி வரை நிலக்கடலில் உடனடி தரிசன முன்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன.
English Summary
Ayyappan temple open in today evening