கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 533 பேர் பலி.. 41,726 பேருக்கு கொரோனா.! - Seithipunal
Seithipunal


பல நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை தன் கோரத்தாண்டவத்தை காட்டி வருகிறது. இதனால், பலர் உயிரிழந்துள்ளனர்.  உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரசால் 201,005,476 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த வைரசால் 4,270,233 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இதுவரை 181,006,410 பேர் குணமடைந்துள்ளனர்.  சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசிலில் தன் கோரத்தாண்டவத்தை காட்டி வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,726 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் கடந்த  24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 533 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,17,69,132 இருந்து 3,18,12,114 ஆக உயர்ந்துள்ளது.  

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,09,33,022 இருந்து 3,09,74,748  ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,25,757 இருந்து 4,11,076 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

aug 05 corona report in india


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->