வருமான வரி கணக்கு தள்ளிப்போட்டவர்கள் கவனிக்கவும்! இன்று நள்ளிரவுக்குப் பிறகு கடுமையான அபராதம்...! - Seithipunal
Seithipunal


2024-25 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய, முதலில் ஜூலை 31-ம் தேதியே கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், ITR படிவங்களில் மேற்கொள்ளப்பட்ட சில முக்கிய மாற்றங்களால், அவகாசம் நீட்டிக்கப்பட்டு செப்டம்பர் 15-ம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில்,இன்று அந்த அவகாசத்தின் இறுதி நாள். இன்று நள்ளிரவு வரை தாக்கல் செய்ய தவறினால், வருமானத்திற்கு ஏற்ப கடுமையான அபராதம் கட்ட வேண்டிய சூழல் உருவாகும்.

இதனால், வரிச் செலுத்துவோர் கடைசி நேர அவசரத்தில் ITR தாக்கல் செய்ய இணையத்தில் பெருமளவில் இணைந்துள்ளனர்.

ஆனால், அதிக பீக் காரணமாக வருமான வரித்துறையின் இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டு, பலர் அவதியடைந்து பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Attention those who postponed their income tax returns Heavy fines after midnight today


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு


செய்திகள்



Seithipunal
--> -->